Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைத்தீவில் வசித்து வரும் குடும்பங்களுக்கு, இரண்டாவது தடவையாகவும் வீட்டுத்திட்டங்களை வழங்கமுடியாதென பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் இரணைமாதா நகர் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பன ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளனவெனவும் தெரிவித்தார்.
இரணைத்தீவில், அவர்கள் தற்போது குடியேறியுள்ள நிலையில் இரண்டாவது தடவையாக வீட்டுத்திட்டங்களை வழங்கமுடியாதெனத் தெரிவித்த அவர், தற்போது அங்கு குடியேறியுள்ள 74 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளனவெனவும் கூறினார்.
அத்துடன், இரணைத்தீவுக்கான இறங்குதுறை புனரமைப்பு, குடிநீர் விநியோகத் திட்டம் போன்ற உட்கட்டமைப்பு வேலைகள் யு.என் டிபி. நிறுவனம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும், அவர் கூறினார்.
இதனைவிட, பொதுமண்டபம் புனரமைத்தல், உள்ளக அபிவிருத்திகள் பலவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
19 minute ago
22 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
27 minute ago