2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு; வவுனியாவில் தாய் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த  நபர் ஒருவரின் மனைவி, தனது நான்கு வயது பெண் பிள்ளை மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்.

அத்துடன், தானும் கிணற்றுக்குள் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதுடன்,  மீட்கப்பட்ட  4 வயது பெண் குழந்தை அம்பியுலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. 

இதனையடுத்து, தாயை கைதுசெய்யத நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X