Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், தனியார் பஸ் ஒன்று இரண்டு முறை விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து, எழுத்தூர் செல்வநகர் பகுதியில் நேற்று (26) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றது.
இச்சம்பவம் குறித்து, தெரியவருவதாவது,
மன்னார் நகரில் இருந்து, தாழ்வுபாடு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, எழுத்தூர் செல்வநகர் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதுண்டு, பின்னர் வீதிக் கரையில் உள்ள மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் காயங்களுக்குள்ளான நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பஸ் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தது. இதன்போது, அதே பகுதியில் வைத்து சைக்கிளில் சென்ற நபர் மீது, பஸ் மோதியுள்ளது. இதன்போது, அந்நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மன்னார் - எமிழ்நகர் கிராமத்தைச் சேர்ந்த பத்திரப்பன் சேது நம்பு (வயது 61) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, பஸ் சாரதி குறித்த இடத்தில் நிறுத்தாது, பஸ்ஸூடன் தப்பிச் சென்ற நிலையில், நேற்று (27) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago