Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாட்டில், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், மன்னார் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றனவென, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், மொத்தமாக 351 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனரென்றார்.
இந்த மாதம், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டாலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவும், அவர் கூறினார்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவகையில், கடந்த ஜனவரி மாதம் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், காற்றினால் பரவும் தொற்று இனங்காணப்படவில்லையெனத் தெரிவித்த அவர், ஆனால், தற்போது காற்றினால் பரவும் தொற்று நாட்டின் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதெனவும் இந்த நிலைமை மன்னார் மாவட்டத்திலும் ஏற்பட்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படத்தவது கடினமாக இருக்குமெனவும் கூறினார்.
இதேவேளை, மன்னார் மாவட்ட சுகாதார துறையினருக்கான 2ஆவது கட்ட தடுப்பூசி, இன்று (29) தொடக்கம் செலுத்தப்படுமெனவும் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே 2ஆவது தடுப்பூசி செலுத்தப்படுமெனவும், வினோதன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago