Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்புரை அறுவைசிகிச்சைக்காக காத்திருந்த 135 நோயாளர்களுக்கு இரு நாட்களில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கந்தசாமி செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கண்சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் கண்புரை நீக்குதல் அறுவைசிகிச்சைக்காக பரிந்துரைசெய்யபட்டு காத்திருப்போரின் பட்டியல் நீண்ட எண்ணிக்கை உடையதாக காணப்படுகின்றது. எனவே அவர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும் செயற்திட்டம் ஒன்று கடந்த 1ஆம், 2ஆம் திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. இரு தினங்களிலும் 135 நோயாளர்களுக்கு வெற்றிகரமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிகிச்சையானது சுகாதார அமைச்சினால் அனுப்பட்ட கண் சத்திர சிகிச்சை நிபுணர் சம்பாபாணகல தலைமையிலான வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களை கொண்ட குழுவே சத்திரசிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
சத்திரசிகிச்சைக்கான நிதி உதவியை புனர்வாழ்வும், புதுவாழ்வும் என்ற நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
52 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
1 hours ago