Editorial / 2019 மார்ச் 25 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சர்வதேசம் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகத் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் பாதிரியார் சக்திவேல், சர்வதேசத்தின் செயற்பாடு இன அழிப்பு நடைபெற்ற ஒரு நாட்டுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகுமெனவும் குற்றங்சாட்டினார்.
இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கத்துக்கு, இன்றும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளததென்பது, தமிழ் மக்களை பொறுத்தமட்டில், பெரும் ஏமாற்றமாகுமெனவும் இந்த ஏமாற்றத்தை சர்வதேசம் திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தற்போது உள்ள ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை சர்வதேசத்துக்கு உள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
13 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
51 minute ago