Niroshini / 2021 மே 28 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இலங்கை வங்கியின் ஏ.ரி.எம் பணம் எடுக்கும் இயந்திரத்தின் நடமாடும் சேவை, நாளை (29) இரண்டு பகுதிகளில் நடைபெறவுள்ளது.
புதுக்குடியிருப்பில் 9 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பணத்தைப் எடுப்பதற்காக, புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்குச் செல்வதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்கள் அன்றாட செலவுக்காக வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய,இரணைப்பாலை சந்தியில், 9 மணி தொடக்கம் 12.30 வரையும் குழந்தையேசு கோவில் சந்தியில், 12.30 தொடக்கம் 3 மணிவரையும், இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025