Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - உடையார்கட்டு கமநல சேவை நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் மானிய உர விநியோகம், நாளை (22) இளங்கோபுரம், தேராவில் விவசாயிகளுக்கு வழங்கப்படுமென, உடையார்கட்டு கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்பிரமணியம் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
ஒக்டோபர் 14ஆம் திகதி, உடையார்கட்டு தெற்கு விவசாயிகளுக்கும் 15ஆம் திகதி, உடையார்கட்டு வடக்கு விவசாயிகளுக்கும் 16ஆம் திகதி, இருட்டுமடு பெரிய நீர்ப்பாசன விவசாயிகளுக்கும் 17ஆம் திகதி, இருட்டுமடு மானாவாரி விவசாயிகளுக்கும் 18ஆம் திகதி, சுதந்திரபுரம் விவசாயிகளுக்கும் இன்று (21), வள்ளுவர்புரம், மாணிக்கபுரம் விவசாயிகளுக்கும், மானிய உரம் விநியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், நாளை (22) இளங்கோபுரம், தேராவில் விவசாயிகளுக்கும், புதன்கிழமை (23) விசுவமடு கிழக்கு விவசாயிகளுக்கும் வியாழக்கிழமை (24), விசுவமடு மேற்கு விவசாயிகளுக்கும் மானிய உரம் வழங்கப்படவுள்ளதாக, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவித்துள்ளார்.
மானிய உரத்தைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் விவசாயிகள், 2019ஆம் ஆண்டுக்கான ஏக்கர் காணிப் பற்றுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, அங்கத்தவர் சந்தாப் பற்றுச்சீட்டு, குத்தகை செய்கையாளர்கள் குத்தகைச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவருவமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago