Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
போதிய பஸ்கள் இன்மை, ஆளணி வளப்பற்றாக்குறை ஆகிய காரணங்களாலேயே, முல்லைத்தீவு மாவட்டத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு, தடையாகவுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சபை நிர்வாகம், இன்று (22) தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடர்ந்துரைத்த நிர்வாகம், மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தனியார் போக்குவரத்துச் சேவையினரின் அத்துமீறிய செயற்பாடுகள் பெரிதும் தடையாகவுள்ளனவெனவும் இதனால் நடைபெறுகின்ற சேவைகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சாடியது.
குறிப்பாக, பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்குரிய நேர ஒழுங்குகளில், சேவைகளை முன்னெடுக்கும் போது தனியார் சேவைகள் இவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனவெனக் குற்றஞ்சாட்டிய நிர்வாகம் இது தொடர்பில் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவெனவும் தெரிவித்தது.
இதேவேளை, ஏனைய இடங்களுக்கான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றை முன்னெடுப்பதற்குரிய போதிய பஸ்கள் இன்மை, ஆளணி வளப்பற்றாக்குறை என்பன தடையாகவுள்ளதாகவும் தற்போது 22 வரையான பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றனவெனவும், நிர்வாகம் கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .