Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயாநகர் கிராமசேவகர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை கிராமத்தை சேர்ந்த நன்னீர் மீன்பிடி மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியின் போது ஈச்சளவாக்கை கிராம பகுதியில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு யுத்தத்தின் பின்னர் நன்னீர் மீன்பிடிக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமக்குரிய நீதியை பெற்றுத் தரக் கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் இலங்கை மனித உரிமை ஆணைகுழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசரணைகளை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிபாரிசு செய்தமைக்கமைய நீரியல் வள திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மீனவர்கள் எதிர்வரும் 1 ஆம் திகதியில் இருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago