2025 மே 19, திங்கட்கிழமை

ஈராண்டு பொதுக்கூட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையின் ஈராண்டு பொதுக்கூட்டம், 11ஆம் திகதியன்று, காலை 10 மணிக்கு தலைவர் சு.மரியநாயகம் தலைமையில் செஞ்சிலுவை சங்க மாவட்டக்கிளை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். யேசு ரெஜினோல்ட், அவுஸ்திரேலியா பிர்ஸ்பேன் பல்கலைக்கழக விரிவுரையாளர் என். இரவீந்திரகுமாரன் என பலரும் கலந்துகொண்டனர்.

இப் பொதுக்கூட்டத்தில் செஞ்சிலுவை சங்கத்தால் 2017 - 2018 ஈராண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் அதன் கணக்கீட்டு அறிக்கை தொடர்பாகவும் மேலும் எதிர்காலத்தில் மாவட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆளுநர் சபையால் உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X