Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“வவுனியாவில், டெங்கை கட்டுப்படுத்தும் பொருட்டு, புகை விசுறும்போது, அனைத்து உணவகங்களும் மூடப்படவேண்டும். இல்லையேல், அனைத்து உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்” என, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி லவன் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வவுனியாவில், டெங்கைக் கட்டுப்படுத்த புகை விசிறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முதல், குறித்த பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
“எனினும், அதனை அசட்டை செய்யும் உணவக உரிமையாளர்கள், உணவகங்களைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுவதுடன், சுகாதாரப் பிரிவினர் மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
“எனவே, டெங்கைக் கட்டுப்படுத்தும் பொருட்டு புகை விசுறும்போது, உணவுப் பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால், உணவகங்களை மூடாத உணவகங்களில் இருந்து, உணவுப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்” என்றார்.
37 minute ago
41 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
6 hours ago