2025 மே 05, திங்கட்கிழமை

உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில், நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி, வசிக்கும் நஞ்சு அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், உறவினர்களால் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

புpன்னர் மேலதிக சிகிச்சைக்காக, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது,  அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

குறித்த சிறுமி வசிக்கும் பிரதேசத்தில், முல்லைத்தீவு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பலருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X