Freelancer / 2023 ஜனவரி 25 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
ஹற்றன் நேஷனல் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, நேற்று முன்திகம் (23) வடமாகாணத்துக்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜொனதன் அலஸ், மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான ‘உயிரிழை’ அலுவலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்கிருக்கும் மாற்று திறனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
மாற்றுவலுவுள்ளோரின் தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்ட ஜொனதன் அலஸ், தன்னாலான ஒத்துழைப்புகளை அவர்களுக்கு நல்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
‘உயிரிழை’ அமைப்பிற்கு 01 சக்கரகதிரையும் 02 காற்று மெத்தைகளும் தலைமை நிர்வாக அதிகாரியால் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஹற்றன் நேஷனல் வங்கி வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் நிஷாந்தன் கருணைராஜ், மல்லாவி வங்கிக் கிளையின் முகாமையாளர் அமிர்தலிங்கம் அமிர்தசொருபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

6 minute ago
38 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
50 minute ago