2025 மே 22, வியாழக்கிழமை

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இன்னமும் வேதனையை எற்படுத்துகிறது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும்,மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் இடையில் இன்று (01) காலை, மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி, மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தொழில் வாய்ப்புகளை  வழங்குதல், இனங்களுக்கிடையில் சுமூகமான ஒற்றுமை, மாவட்டத்துக்குத் தேவையான அடிப்படை தேவைகள், மீனவர், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆயருடன் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களும், அதனுடைய தாக்கமும் இன்னும் எல்லோருடைய உள்ளங்களிலும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .