Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும் அரசாங்கத்தின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும், மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இன்று (25) காலை 10.30 மணியளவில், மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில், கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக, உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, உயிலங்குளம் - மன்னார் வீதியில் அமைந்துள்ள உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை சென்று, அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மன்னார் மாவட்டச் செயலாளரிடம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர், குறித்த மகஜரை ஜனாதிபதிக்கு உடனடியாக கையளிப்பதாகத் தெரிவித்தார்.
விவசாயிகள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்தவர்கள். எனினும், எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பார்கள் என நம்புவதாகவும், அவர் தெரிவித்தார்
மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்க துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
40 minute ago
49 minute ago