Editorial / 2021 ஜூலை 07 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஒட்டுசுட்டான் கமநல சேவைத் திணைக்களத்தால் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவுள்ளதாக, இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமநல சேவைத் திணைக்களத்தின் முன்னால் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால், அங்கு பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில், முரண்பாடு ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்ற நிலைவியது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், 33 கமக்கார அமைப்புகள் காணப்பட்டாலும், மேட்டுநில பயிற்செய்கைளர்களுக்கு ஒரு விவசாயிக்கு ஒரு அந்தர் உரம் வழங்குவதாக, கமநல சேவைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமநல சேவைகள் திணைக்களத்தால் எந்தவித திட்டமிடல்களும் மேற்கொள்ளப்படாமல் விவசாயிகளுக்கு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும், இன்று (07) காலை, கமநல சேவைத் திணைக்களத்தின் முன்னால் சூழ்ந்துள்ளனர்.
இதையறிந்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், நாட்டில் கொரோனா தொற்று அபாயம் காணப்படுவதாக தெரிவித்து, விவசாயிகளை கமநல சேவைத் திணைக்களத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, விவசாயிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், சரியான விவசாயிகளை தெரிவு செய்து, அந்த விவசாயிகளுக்கான உரத்தை வழங்கும் நடவடிக்கையில், ஒட்டுசுட்டான் கமநல சேவைத் திணைக்களம் ஈடுபடவில்லை என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை உரம் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்துக்கு வந்துள்ளதாகவும் இந்த உரம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தகவல்களை விவசாயிகளுக்கு, கமநல சேவைத் திணைக்களத்தால் அறிவிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026