2025 மே 09, வெள்ளிக்கிழமை

உரத்துக்காக கூடியவர்களுக்கு பி.சி.ஆர்

Niroshini   / 2021 ஜூலை 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தில், நேற்று (07) உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒன்றுகூடியவர்களுக்கு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள என்பன தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமநல சேவை நிலையத்தில், நேற்று (07) நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது, குறித்த பகுதிக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள், கமநல சேவை நிலையத்துக்குள் இருந்தவர்களை வைத்து  மூடியுள்ளனர். இந்நிலையிலும் அதில் இருந்து ஒருசிலர் தப்பி வெளியில் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அங்கு இருந்த 75 பேரிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிசிஆர் முடிவு வரும் வரை வீட்டை விட்டு வெளியேறாதவாறு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X