2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் இருந்து, நேற்று (24) மாலை, உருக்குலைந்த நிலையில், சடலமொன்று அடையாளங்காணப்பட்டுள்ளது..

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார்,  சடலத்தை அடையாளங்கண்டுஈ அதனை மீட்டனர்.

இந்நிலையில், இன்று (25) காலை குறித்த பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி, சடலத்தை பார்வையிட்டதோடு, உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு, மன்னார் வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிதத் மன்னார் பொலிஸார், சடலம் இவதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .