2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில்  இருந்து  உருக்குலைந்த நிலையில்  சடலம் ஒன்று  மீட்கப்பட்டுள்ளது.

இன்று  குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால்  கிளிநொச்சிப் பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட  தகவலை அடுத்து, குறித்தக் காட்டுப்  பகுதிக்குச் சென்ற  கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான  குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார்  அறுபத்தி ஐந்து  வயது மதிக்கத்தக்க  ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து  பல கிலோமீற்றர் தொலைவில், காட்டுப்பகுதியில் குறித்த சடலம்  இருப்பதாகவும் குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில்   மண் அகழ்வு  மற்றும்  மரக்கடத்தல் போன்ற  சட்டவிரோத செயற்ப்பாடுகள் நடைபெறுவதற்கான தடயங்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .