Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 25 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, அரசாங்கத்தின் மானிய உரம் முழுமையாகக் கிடைக்காததை, ஊடகங்கள் வாயிலாக கருத்துத் தெரிவித்த இரு விவசாயிகள், பொலிஸாராலும் கமாக்கார அமைப்பின் தலைவர்களாலும் மிரட்டப்பட்டுள்ளனர்.
முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில், அரசாங்கம் கொடுத்த மானிய உரம், மூன்று தனியார் நபர்களிடம் விற்பனை செய்வது தொடர்பிலும் அதனை அந்த தனியார்களிடம் இருந்து வாங்கிய விவசாயிகள், ஆதாரபூர்வமாக ஏனைய விவசாயிகளுக்கு தெரிவித்தமை தொடர்பிலும், மானிய உரம் கிடைக்காத விசாயிகள், அண்மையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு கருத்துத் தெரிவித்த அந்த விவசாயிகளில் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ஒட்டுசுட்டான் பொலிஸாரால் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், ஒட்டுசுட்டான் கமநல சேவைத் திணைக்கள அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இந்த விவசாயி, எவரையும் இனம்காட்டி குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மறுபக்கத்தில் ஒட்டுசுட்டான் - முத்துஐயன்கட்டு கமக்கார அமைப்பின் தலைவர், விசாயிகளை மிரட்டியுள்ளார்.
உரம் தொடர்பிலோ, ஏனை அரசாங்கம் வழங்கும் மானியங்கள் தொடர்பிலோ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தால், இனி எந்த மானியமும் கிடைக்காது எனவும் ஒட்டுசுட்டான் கமநல சேவைத் திணைக்கள அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago