Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை, நீதிமன்றத்தின் முன்பாக வைத்து கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியமை தொடர்பில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (22-07-2020) காலை செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவரை, நீதிமன்ற நுழைவாயிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து, கரைச்சி பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவருடன் வந்த மற்றுமொருவர் அலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்
இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட போது, படம் தேவையென்று தெரிவித்துவிட்டு, மீண்டும் அந்த ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்ற காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, புகைப்படம் எடுத்தவர் தொடர்பான விவரங்களைப் பெற்று, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பியதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago