2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்கிளாய் களப்புக்;குள், புல்மோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இயந்திரப்படகுகளில் அத்துமீறி வருகைதருவதுடன், சட்டவிரோத கூட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கருநாட்டுக்கேணி மீனவர்களின் அழைப்பினை ஏற்று, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் ஆகியோர், இன்று (03), களப்புக்கு நேரடியாகச் சென்று, அங்கு இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது, குறித்த சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்கும் போது, அங்கிருந்த சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் புல்மோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .