2025 மே 08, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் அந்தோனி மார்க் காலமானார்

Niroshini   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க், தனது 80ஆவது வயதில், நேற்று   (21) இரவு காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக, முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க், மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

அத்துடன், இவர், குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும் இரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு, பல்வேறு போராட்டங்களையும் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X