Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், ஏப்ரல் 07ஆம் திகதியன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேராட்டத்தில், கலந்துகொண்டவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனந்தெரியாத நபரொருவர் தன்னை கடற்படை அதிகாரியென அடையாளப்படுத்திகொண்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபருக்கு எதிராக ஊடகவியலாளர்கள் செயற்பட்டமைக்காக, குறித்த நபர், ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடொன்றை செய்யுதுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக வியாழக்கிழமை (18), குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
53 minute ago