2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்கள் வாக்குவாதம்

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்  

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்குமாறு கோரி, ஊடகவியலாளர்கள் சிலர், நேற்றுத் திங்கட்கிழமை (24), வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண பிரதி முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத் தலைமையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது.  

“மக்கள் சார்ந்த விடயங்களைக் கதைக்கும் போது, ஏன் ஊடகங்களுக்கு மறைத்து கதைக்க வேண்டும். அவை குறித்து செய்தி சேகரிக்க, எமக்கு முழுமையான அனுமதி வேண்டும்” என, ஊடகவியலாளர்கள் கோரினர். இதனையடுத்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஊடகங்களுக்கு அனுமதி வழங்கினார்.  

கூட்டம் ​தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், 45 நிமிடங்கள் வரை, கூட்ட மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியில் நின்றமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .