எஸ்.என். நிபோஜன் / 2020 மார்ச் 22 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். அதற்கமைவாக மக்கள் நடமாட்டம் மிக மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.
வைத்தியசாலை சேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை. வைத்திய சேவைகளுக்காக விசேட நோயாளர் காவு வண்டிகள் ஈடுபட்டுள்ளன. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஆங்காங்கே நடமாடும் பொது மக்களுக்கு நடமாட்டத்தைத் தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனர்.
கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்துக்கு கிளிநொச்சி மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
9 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Mar 2026