2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஊருக்குள் நுழைந்த முதலை

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடும் வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன் குடிப்பதற்கான நீர் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக நந்திக்கடலிலுள்ள நன்னீர் வற்றியுள்ளதாகவும் அங்கிருக்கும் முதலைகள் நன்னீர் தேடி ஊருக்குள் வந்து அலைந்து திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை (08) காலை ஊருக்குள் திடீரென நுழைந்த முதலை, அங்கிருந்த வீட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை, பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்துள்ளனர்.

இவ்வாறான முதலை நடமாட்டம் காரணமாக சிறுவர்கள் முதியவர்கள் உட்பட அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .