2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சம்பள ஏற்றம் வழங்கப்படாமை ,சம்பளம், மீளாய்வுசெய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா நகரசபையின் புதிய அரச பொது ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள், நேற்றைய தினத்திலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய அவர்கள், பதாதைகளை ஏந்தி யவண்ணம் நேற்று காலை 7 மணிக்கு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்தப் போராட்டம் இன்றையதினமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம்,  கு. தீலிபன், செ.கயேந்திரன், காதர் மஸ்தான் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியதுடன், இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் தமது போராட்டத்தை முடித்துக்கொள்ளவிருந்த நிலையில், நகரசபை செயலாளரின் தன்னிச்சையான முடிவால் தமது போராட்டத்தை மீண்டும் தொடர்வதாக, போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .