Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 நவம்பர் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சி தலைவரின் இராஜதந்திரம் படுதோல்வியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரு பிரதான கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட அதிகாரபோட்டியே இவ்வளவு முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பிரச்சினையை சரியான விதத்தில் கையாளவில்லை.
கடந்தவாரம் 14 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த எதிர்க்கட்சிதலைவர் வெறுமனவே இந்தநாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டிருக்கிறது என்பதை தான் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தாரே தவிர பல வருடகாலமாக இரு பிரதான கட்சிகளும் தமிழ்மக்களுக்கு புரிந்த அநீதிகளை பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் எந்தவிதமான கவனத்தையும் செலுத்தவில்லை.
இறுதிப்போரின் போது நடைபெற்ற அவலங்களை நிறுத்துவதுக்கு கொழும்பில் இருக்கக்கூடிய இராஜதந்திரிகளை அழைத்து பேசாத நிலையில் அதற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இன்று ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாக கூறி சந்தித்துள்ளார்.
எதிர்கட்சிதலைவர் முள்ளிவாய்க்காலிலே போராளிகளையும், மக்களையும் படுகொலை செய்த போது பார்வையாளனாக இருந்தார்.
ஒட்டு மொத்தத்தில் எதிர்கட்சி தலைவரின் இராஜதந்திரம் படுதோல்வியடைந்துள்ளது என தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago