2025 மே 08, வியாழக்கிழமை

’எவ்வித முறைப்பாடும் எனக்கு கிடைக்கவில்லை’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை  தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் தனக்கு கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,   உணவுப் பொருள்களுக்கான கட்டுப்பாட்டு விலையை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மாத்திரமே அதிகரித்த விலை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் கூறினார்.

அத்துடன், தற்போது முடக்க நிலையால் வறுமை நிலையை எதிர்கொண்டுள்ள குடும்பங்களுக்கான 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், நேற்று (25) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X