Freelancer / 2023 ஜனவரி 16 , பி.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கடந்த முறை க.பொ.த சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றி 9
பாடங்களிலும் ஏ பெறுபேறுகளை பெற்ற மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட மூன்று
மாணவர்களுக்கு சங்கத்தானை சாரதா சனசமூக நிலையத்தினர் தலா 50 ஆயிரம் ரூபாவினை
ஊக்குவிப்புத் தொகையைாக வழங்கியுள்ளனர்.
சாவகச்சேரி சங்கத்தனை சனசமூக நிலையம் மற்றும் இளங்கோ பாலர் பாடசாலையின் பொங்கல்
விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகம்
கையளிக்கப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும்
வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் என் சர்வேஸ்வரன், ஊடகவியலாளர் மு.
தமிழ்ச்செல்வன், வேல்ட் விசன் நிறுவனத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் அழகுராஜா
மற்றும் சனசமூக நிலையத்தின் தலைவர் செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள்
மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். R
55 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
09 Nov 2025