2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐயன்கன்குளம் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லை

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்   

முல்லைத்தீவு துணுக்காய் ஐயன்கன்குளம் பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால், இக்கிராமத்தில் தாங்கள் பெரும் அச்சத்துடன் வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம், பழைய முறிகண்டி, புத்துவெட்டுவான், தேறாங்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.  

இதனால் மேற்படி கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

குறிப்பாக, பகல் வேளைகளில் கூட இப்பகுதிகளில் காட்டுயானைகளில் அட்டகாசம் அதிகளவில் காணப்படுகின்றன.  

சனிக்கிழமை (29) இரவு, ஐயன்கன்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைகள், பெருமளவான பயன்தருமரங்களை அழித்துள்ளதுடன் ஊர் மனைக்குள் பெரும் அட்டகாசம் செய்துள்ளன.  
பெரும் சத்திமிட்டு கலைத்த போதும் யானைகள் செல்லவில்லை என்றும், இதனால், இரவு முழுவதும் அச்சத்துடனேயே இருந்ததாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  

தொடர்ந்தும் இப்பகுதியில் யானையின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றன என்றும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .