2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் வரவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மாந்தை கிழக்கு அபிவிருத்துக்கென ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய் நிதி இன்னும் வரவில்லையென, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் நவரத்தினம் ரஞ்சனா தெரிவித்தார்.

நேற்று  (30) நடைபெற்ற மாந்தை கிழக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நிதிகள் வந்து சேராததன் காரணமாக, வீட்டுத் திட்டங்கள் அரைகுறையாகக் காணப்படுகின்றனவெனவும் தனிநபர்களுக்கான உதவிகள் கிடைப்பதில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

மாந்தை கிழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரம் கஷ்ட, அதிகஷ்ட பிரதேச கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றனவெனத் தெரிவித்த அவர், ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு மேற்படி கொடுப்பனவுகள் கிடைப்பதில்லையெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .