Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 16 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செகீதாஞ்சன்
முல்லைத்தீவு - நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் ஆண் மாணவர்களுடன் நீண்ட காலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணித பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணித பாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவர் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையம் வைத்தும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் கல்வி கற்பித்து வந்துள்ளார்.
இவ்வாறு கல்வி கற்றுவரும் ஆண் மாணவர்களை தன் வலைக்குள் வீழ்த்தி ஓரின பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பிரதேச செயலத்தில் முறையிடப்பட்ட போதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 13.11.23 அன்று மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த தனியார் வாத்தி நெட்டாங்கண்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன், இது தொடர்பிலான சட்டவைத்திய பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணைகள் என்பன தற்போது இடம்பெற்று வருவதாக அறியக்கிடைத்துள்ளது. R
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025