2025 மே 17, சனிக்கிழமை

ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் அலுவலகம் திறந்துவைப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினத்தின் அலுவலகம்,  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், நேற்று (02) திறந்து வைக்கப்பட்டது. 

இதில், மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் மேலதிகச் செயலாளர் கனகேஸ்வரன், மாவட்ட கணக்காளர் ரெஜினோல்ட், மாவட்டச் செயலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலும் மக்களின் குறைகளை கேட்டறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அபிருத்திக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .