2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’ஒரு சிலரின் கருத்துகளை கூட்டமைப்பின் கருத்துகளாக ஏற்க வேண்டாம்’

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஒரு சில நபர்கள் அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சில பிரதிநிதிகளின் செயற்பாடுகளை வைத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாகப் பிழைசெய்கின்றதென்று, யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாமென, முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் கருத்துகளைக் கூட்டமைப்பின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள வேண்டாமெனவும், அவர் கூறினார்.

முல்லைத்தீவு - கனகரத்தினபுரம் பகுதியில், நேற்று முன்தினம் (16) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .