Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 08 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு சென்ற அரச பேருந்தில் முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
வவுனியா மெனிக்பாம் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பகுதியில் வசிக்கும் அவருடைய மகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு வவுனியாவுக்கு செல்வதற்காக மன்னாரிலிருந்து குறித்த பேருந்தில் பயணித்துள்ளார்.
அதே நேரம் குறித்த பேருந்தில் திருகோணமலையைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் முதியவரின் அருகிலிருந்து பயணித்துள்ளார்.
மன்னாரில் குறித்த பேருந்து நானாட்டான் பிரதேச பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திய போது குறித்த முதியவர் வைத்திருந்த பணத்தை குறித்த இளைஞர் பறித்துக் கொண்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்து ஓடியுள்ளார்.
இந்த நிலையில் முதியவரின் கூச்சலை கண்ட அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் குறித்த இளைஞனை துரத்திச் சென்று பணத்தோடு மடக்கி பிடித்தனர்.
பின் உடனடியாக முருங்கன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸாரிடம் பணத்தை திருடிய இளைஞரை இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞரையும், முதியவரையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸார் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
29 minute ago
36 minute ago