Editorial / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வவுனியா - ஓமந்தையில் இயங்கும் ஈயத்தொழிற்சாலையால் இயற்கை மாசுபடுத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, குறித்த தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அங்கு சென்று நேரடியாக பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - பளம்பாசி மாமடு பகுதியில் நடைபெற்ற சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், பற்றியில் இருந்து வரக்கூடிய அமிலத்தன்மைகள் கொண்ட நீர், கருந்துகள்கள் எல்லாம் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. இது சுற்றுப்புறத்துக்கும் நிலத்தடி நீருக்கும் கேடுவிளைவிக்கும் செயற்பாடு எனவும் கூறினார்.
“இதில் கவலையளிக்கின்ற விடையம் இதற்கான அனுமதியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள பிரதேச சபை வழங்கியுள்ளது. சுற்றுப்புற்சூழல் திணைக்களம் வழங்கியுள்ளார்கள்.
“இது தொடர்பில், குறித்த பிரதேச சபை மற்றும் திணைக்களத்திடம் விளக்கம் கேட்டு, கடிதம் அனுப்பவுள்ளேன். விரைவில் ஈய தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago