2025 மே 23, வெள்ளிக்கிழமை

கங்கங்குளத்தில் பெண் கொலை

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – செட்டிகுளம், கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கங்கங்குளத்தில் வசித்து வந்த ர. அந்தோணியம்மா  என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைக்கும் கணவனுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாள்களாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்த நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவனால் வெங்காய வெடி என தெரிவிக்கப்படும் உள்ளூரில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வெடியைப் பயன்படுத்தியே மனைவியை கொலை  செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செட்டிகுளம் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X