2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்    

கிளிநொச்சி - கோணாவில் கிராமத்தில், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்துமாறு, பாதுகாப்புத் தரப்பினருக்கு  அறிவித்திருந்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதவிடத்து, கிராமத்தைச் சேர்ந்த சுயாதீன இளைஞர்கள் குழுவொன்று, தாங்களாக முன்வந்து, கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு அழித்துள்ளது.

15க்கும் மேற்பட்ட இளைஞர் குழுவால், கோணாவில் - யூனியன்குளம் பிரதேசக் காட்டுப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களே இவ்வாறு முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 15க்கு மேற்பட்ட  பரல்கள், 25க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கலன்கள் என்பவற்றையும் அக்குழு வெட்டிச் சேதப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .