Editorial / 2023 நவம்பர் 10 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும், கோடாக்களும் கைப்பற்றபட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து வௌ்ளிக்கிழமை (10) மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago