2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் வைக்குமாறு உத்தரவு

Niroshini   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், 24 போத்தல்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை, எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி வரை, அச்சுவேலியிலுள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து இந்தச் சிறுவன் கடந்த 11ஆம் திகதி தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.

சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, தான் கசிப்பு வைத்திருந்ததை சிறுவன் ஏற்றுக்கொண்டதையடுத்து, தீர்ப்புக்காக வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்த நீதவான், அதுவரையில் சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .