2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கஜமுத்துக்களுடன் மூவர் கைது

Editorial   / 2021 ஒக்டோபர் 08 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

க. அகரன்

வவுனியாவில் ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் நான்கினை வைத்திருந்த மூன்று பேரை விசேட அதிரடிபடையினர் கைதுசெய்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய  தகவலையடுத்து வவுனியா  பிரபல உணவகத்துக்கு முன்பாக வைத்து அந் நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து நான்கு கஜமுத்துக்களை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி ஒன்றரைக்கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது,

கைதுசெய்யப்பட்ட மூவரும்  வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார். அம்மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X