Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - இலுப்பைக் கடவைப் பிரதேசத்தில் வைத்து சொகுசு வாகனமொன்றில், கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினரையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும், 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா, நேற்று (22) உத்தரவிட்டார்.
மன்னார் இலுப்பைக்கடவை வீதியல் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படையின் வீதி சோதனை சாவடியில் சம்பவ தினம்
ஒக்டோபர் 19ஆம் திகதியன்று, வீதிச் சோதனைச் சாவடி ஊடாக செல்ல முற்பட்ட சொகுசு வாகனமொன்றை கடற்படையினர் நிறுத்துமாறு சமிஞ்கை காட்டினர்.
இதன்போது, சமிஞ்கையை மீறி, குறித்த வாகனம் சென்றபோது, அவ்வாகனத்தை நோக்கி கடற்படையினர் துப்பிக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மடக்கி பிடித்தனர்.
குறித்த வாகனத்தை சோதனை செய்த போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட 164.3 கிலோகிராம் கஞ்சாவை, கடற்படையினர் மீட்டனர்.
இதையடுத்து, வாகனத்தில் இருந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினரையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும், கடற்படையினர் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .