Freelancer / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் அரசாங்கம் தீவிரம் காட்டியே வருகின்றது என வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலா கடற்கரையிலுள்ள காணியை கடற்படையினர் அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்ததாவது;
பிரதேச சபையின் காணியை தான், கடற்படையினருக்கு வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன், குறித்த காணியை அவ்வாறாக வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன்.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை (03) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்துக்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுத்தனர்.
அடிப்படையில் இந்த நிலம், உள்ளூராட்சி மன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இந்த நிலம் குறித்து பிரதேச செயலாளர் முடிவுகளை எடுக்க முடியாது. மேலும், மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவ மயப்படுத்த முடியாது என்றார். R
53 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
2 hours ago