2025 மே 09, வெள்ளிக்கிழமை

கடலட்டை பண்ணைக்கு கஜேந்திரன் களவிஜயம்

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரி - கௌதாரிமுனையில் உள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை,  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குழுவினர், இன்று (29), நேரில் சென்று பார்வையிட்டனர். 

இதன் போது,  குறித்த கடலட்டை பண்ணையில், சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும், அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான அடையாளங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.

குறித்த பகுதியானது, ஆரம்பத்தில், பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும், அப்பகுதி கல்முனை பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக, அக்குழுவினரிடம் மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணை அமைந்துள்ள இடம், கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், இந்தப் பண்ணையால் குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும், மீனவர்கள் தெரிவித்தனர். 

இவ்வாறான நிலையில், குறித்த பகுதி கால காலமாக தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி என்றும் அப்பகுதியிலேயே சீனர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும், மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X