2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கட்சியை விட்டு ஆனந்தசங்கரி வெளியேற வேண்டும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி உடனடியாக பதவி விலகி, இளைஞர்களிடம் இந்தக் கட்சியை ஒப்படைக்க வேண்டுமென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்கமுகுந்தன்  தெரிவித்துள்ளார். 

முன்னாள் மாநகர முதல்வர் சிவபாலனின்  22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்துரைத்த அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தில் 91 வாக்குகளை மட்டும் பெற்ற கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இனியும் இந்த கட்சியில் இருப்பதற்குத் தகுதியற்றவரென்றார். 

அவர் உடனடியாக இந்தக் கட்சியை விட்டு வெளியேறி அவருக்கு அடுத்ததாக உள்ள இளைஞர்களிடம் கட்சியை கொடுப்பதன் மூலமே கட்சி தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியுமெனவும் கூறினார்.

 ஆனந்தசங்கரி தன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து செயற்படுவதாகவும் எமது கட்சி  உறுப்பினரின்  நினைவேந்தல் நிகழ்வை கட்சி அலுவலகத்தில் நடத்துவதற்குக் கூட  அனுமதி வழங்காது கட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு கொழும்புக்குச் சென்றுவிட்டதாகவும், தங்கமுகுந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .