Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பொதுச் சந்தைக் கட்டட நிர்மாணப் பணிகள் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் விளக்கத்தை அமைச்சரவை கோரியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது சந்தை கட்டடத்துக்கான புதிய திட்டத்தை, நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டிருந்தனர். இதற்கான வரைபடத்தையும் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலில் 150 மில்லியன் ரூபாய்க்கான திட்டமென மதிப்பீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் 767 மில்லியன் ரூபாயாக மாற்றப்பட்டது.
இதனையடுத்தே, இவ்விடயம் தொடர்பில், அமைச்சரவை நகர அபிவிருத்தி அதிகார சபையினரிடம் விளக்கத்தை கோரியுள்ளது.
இதற்கான விளக்கத்தை வழங்கும்போதே, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக, இதற்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago