2025 மே 05, திங்கட்கிழமை

கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் ட்ரோனில் சிக்கினர்

Niroshini   / 2021 மே 30 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில், இன்று (30) முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் கமெரா கண்காணிப்பின் மூலம், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை, விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி, மன்னார்   பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர்.

இதன் போது கொரோனா கட்டுப்பாட்டை மீறி, மன்னாரில் மைதானங்களில் ஒன்றுகூடி விளையாடியமை, வீதிகளில் கூடி நின்றமை ஆகிய குற்றச்சாட்டில், 15 பேர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்,  வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X